Sunday, January 4, 2015

விநாயகர் பிரதிஷ்டை


கிருஷ்ணர் வழிபாடு கோயில்கள் விஷ்ணுக்குரியது எனினும் விஷ்ணு ஆலயங்களில் விநாயகர் இருப்பதில் தவறில்லை. அதாவது விஷ்ணு ஆலையங்களில் சிவன் இருப்பதும் சிவாலயங்களில் விஷ்ணு இருப்பதும் நல்ல விஷயம்தான். மனிதர்களாகிய நாம்தான் கடவுள்களில் பிரிவினையை உண்டாக்குகிறோமே தவிர தெய்வங்கள் எல்லாம் சிவம் வைஷ்ணவம் என வேறுபட்ட பார்வையில் நமக்கு நன்மை செய்யவே உள்ளன. அந்த வகையில் ஆவல்சூரன்பட்டி கிருஷ்ணன் கோவிலில் விநாயகர் வழிபாடு உண்டு என்பது சிறப்பு அம்சம்.

இவ்வூரில் ராசாத்தி அம்மாள் கடவுள் பக்தியும் பரந்த எண்ணமும் கொண்டவர். அந்த வகையில் இவ்வூரிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் மூலப் பொருளாகிய விநாகர் அவசியம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவராகவே முன்வந்து கிருஷ்ணன் கோவிலின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி ஒரு சிறிய பீடத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய காரணமாக இருந்தார்.

2013-ல் கோவில் திருப்பணியின்போது விநாயகர் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டார். அன்று முதல் கோவிலுக்கு வருபவர்கள் முதலில் விநாயகரையும் பின்னர் கிருஷ்ணனையும் வணங்கி வருகிறார்கள் என்பது சிறப்புக்குரியது. மார்கழி மாதம் தினந்தோறும் விடியும் வேளையில் விநாயகருக்கு நன்ணீராட்டி பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை கோவிலுக்கு வந்து விநாயகரையும் கிருஷ்ணனையும் ஒரே இடத்தில் வழிபட்டு நலம்பெற வேண்டுகிறோம்.    

Thursday, July 18, 2013

நினைத்தது நிறைவேறும் அதிசயம்

இந்தக் கோவிலுக்கு ஒரு மகிமை உண்டு. நினைத்தது நிறைவேறும். முழு நம்பிக்கையோடு கண்ணபிரானை வணங்கி மனதளவில் வேண்டிக் கொண்டால் போதும். வருடம் திரும்பும் முன் நினைத்த காரியம் நிறைவேறும் அதிசயம் காணலாம். 

 சிலர் தம் வாழ்வில் பல சோதனைகளையும் தடைகளும் சந்தித்திருப்பார்கள். மனிதர்களின் இயல்பு தமக்கு வாழ்க்கையில் சோதனைகள் வரும்போதுதான் தெய்வ சிந்தனை வரும். தம் நிலையை எண்ணி நொந்து கொள்ளும் சமயம் திரு. கணபதி கோன் அவர்க்ளிடம் எடுத்துரைத்தால் போதும். கணபதி கோன் அவர்கள் ஆதி முதல் இந்த கோவிலுக்கு இடைவிடாது பல வகையில் தொண்டு செய்து வருபவர். அருள்வாக்கு சொல்பவர் அல்ல. ஆனாலும் இயல்பாக தன் மனதில் படும்போது சிலருக்கு சில நேர்த்திக்கடன் கூறுவார். அந்த நேர்ச்சைச் செயல் கோவில் தொடர்புடையதாகவே இருக்கும். 

சம்பந்தப்பட்டவர் முழு நம்பிக்கையோடு அவர் சொல்லும் நேர்ச்சையை செய்வதாக ஏற்றுக் கொண்டு வேண்டிக்கொண்டால் போதும். வருடம் திரும்புவதற்குள்  எண்ணிய காரியம் நிறைவேறும் அதிசயத்தைக் காணலாம். இவ்வாரு தன்னிச்சையாக அருள்வாக்கு கூறுபவர் எதையும் தனக்கென எதிபார்க்க மாட்டார்.  எதுவானாலும் கோவிலுக்கு செய்யச் சொல்வார். அந்த வகையில் கோவிலுக்கு பொருள்களாக வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. பரட்டாசி திருவிழாவின் போது சில செலவுகளை ஏற்பதும் உண்டு. 

சிலருடைய நேர்ச்சைகள்:  
1. அன்னதானம் வழங்குதல்
2. சப்பரம் புஷ்ப அலங்காரம்
3. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல்
4. ரேடியோ மைக்செட்
5. தேங்காய், வாழைப் பழங்கள் உபயம்
6. விழாவின்போது சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு
7.சிறப்பு நிகழ்ச்சிகளுக்காண மேடை அமைப்பு
8. பந்தல் உபயம்
9. சுவாமி ஊர்வலத்தின்போது சீர்பாதம் தாங்கிகளுக்கு கோடி சாத்துதல்
10. சுவாமி மற்றும் கோபுரத்திற்கு பெயிண்ட்  உபயம்

இவ்வாறு விரும்பி செய்யும் நேர்த்திக்கடன் உபயம் நாளுக்கு நாள் வளர்ந்து கோண்டே வருகிறது. இதை வாசிக்கும் பக்தர்கள் தங்கள் நலன் கருதி திரு. கணபதி அவர்களை சந்தித்து வாக்கு பெறலாம். சிலருக்கு நினைத்த காரியம் நடக்காதென்றும் கூறுவார்.    

 

Wednesday, July 17, 2013

திருப்பணிக்கான பூமிபூஜை


பழைய கோவில் இடிக்கப்பட்ட நிலையில்

                                     















   
                                                                                                                                                                                                                                                                                                                                        பூசாரி  (தி. பாலகிருஷ்ணன்) ~ வாஸ்து பூஜை







பூசாரி மூலஸ்தான பூஜை


சென்ட்ரிங் முருகன் கற்பூரம் காட்டுதல்

கோவில் நிர்வாகி (வரதராஜன்) கற்பூரம் காட்டுதல்

துணை நிர்வாகி (நாராயணசாமி) கற்பூரம் காட்டுதல்

திருமதி. ஜெயபாப்பு வரதராஜன் கற்பூரம் காட்டுதல்

திரு. விஜயன் கற்பூரம் காட்டுதல்

பூமாதேவிக்கு பால் நிரப்புதல்


     வாஸ்து கொண்டு வருதல் (திரு. கணபதி கோன்)

                                 பூமாதேவிக்கு வாஸ்து செய்தல் 


திருப்பணியின்போது ஒரு அதிசயம்



2012-ல் கோவில் திருப்பணியயின் போது மூலஸ்தானத்தில் கிரனைட் கல் பதிக்கலாம் என்றெண்ணி ஒரு மூலையில் 1973-ல் பதிக்கப்பட்ட சாதாரன செராமிக் பூக்கல் உடைக்கும்போது ஒரு அதிசயம் காணப்பட்டது. கல் உடைக்கப்பட்ட இடத்தில் ஒரு குழி தென்பட்டது. அதை பெரிது படுத்தாமல்  தொடர்ந்து அடுத்த கல் உடைக்கப்பட்டது. என்ன அதிசயம்! சிறு குழி 1 அடி ஆழமுள்ள அகன்ற குழியாக காணப்பட்டது. மின் விளக்கில் பார்த்தால் அந்தக் குழி மூலஸ்தானம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டது. கட்டிட கொத்தனாருக்கோ பயம். அதை இடிக்கத் தயங்கினார். ஆனாலும் பகவான் உத்தரவு பெற்று தோண்ட முடிவெடுக்கப்பட்டது. அந்த நிலையில் 40 ஆண்டுகளாக சுமார் 1 டன் எடையுள்ள பீடம் மற்றும் மண் விக்ரகம் பாலம் அமைத்தாற்போல் உள்ள அமைப்பில் அந்தரத்தில் நின்று அருள் பாலித்து வந்துள்ளது அறிய வந்தது. எனினும் தற்போது அந்த 1 அடி ஆழமுள்ள குழி செங்கற்கலால் நிரப்பப்பட்டு கிரனைட் கல் பதிக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்வை நேரில் கண்டவர்கள் இன்றும் வியப்புடன் கூறக் கேட்கலாம். எல்லாம் அந்த பகவான் செயல்தான்.     

கோவிலில் உள்ள பரிகார தெய்வங்கள்


தற்போது திருப்பணி செய்த வகையில் கோவிலின் பின் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், விஷ்னு துர்க்கை, தனலட்சுமி, தட்சிணாமூர்த்தி என பரிகார தெய்வங்கள் என நான்கு அருள் மிகு தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்த நேரமும் இந்த தெய்வங்களை வணங்கி பிரார்த்தைனை செய்து கொள்ளலாம். இவை இந்த கோவிலுக்கு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
                                                                       (1)
 < அருள்மிகு ஆஞ்சநேயர் >

                                               * ஆஞ்சநேயரின் சிறப்பு *                               
மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது நேரில் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால் எண்ணிச் செல்லும் காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம். நம்பிக்கைதான் முக்கியம். நம்பினார் பலன் பெறுவர்.

ஆஞ்சநேயருக்கு உகந்தது துளசிமாலை. மேலும் சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி ஆகியவை மிகவும் ஏற்புடையவை. நேர்த்திக் கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம்.
      (2)
  < அருள்மிகு விஷ்னு துர்க்கை >

                                          *விஷ்னு துர்க்கையின் சிறப்பு *
துர்க்கை தாய் சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களில் காட்சிதருவது உண்டு. விஷ்னு ஆலயங்களில் விஷ்னு துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

* வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் அன்னை.
* துர்க்கை தீமைகளை அழித்து, வெற்றியை அருள்பவள்.
* பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரர் ஆனார்.
* போரில் வெற்றி பெற ஸ்ரீராமர் துர்க்கையை வழிபட்டார்.
* மகாபாரதத்தில் தர்மர் துர்க்கையை வணங்கினார்.
* துர்க்கையை வணங்க மரண பயம் விலகும்.
* எதிரிகளை வெல்லலாம் அருள் புரிவாள்.

ராகு கால நேரங்களும், செவ்வாய், ஞாயிறு, வெள்ளி கிழமைகளும், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி திதிகளும் துர்க்கா பூஜைக்கு மிக உகந்தவை. வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும்.
                                                                        (3)
                                                <அருள்மிகு தனலட்சுமி>

                                                *தனலட்சுமியின் சிறப்பு*
                                              தனலட்சுமி செல்வத்திற்கு அதிபதி.
                                                                     (4)
                                               <அருள்மிகு குரு பகவான்> 

                                               *குரு பகவானின் சிறப்பு*
தட்சிணா மூர்த்தியின் மறு பெயர் குரு பகவான். இவர் தொழில் மற்றும் கல்வி ஞாணத்திற்கு அதிபதி. குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர். குரு பகவான் என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இவர் பார்வை பட்டால் பாவங்கள் சாம்பலாகும்.   குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.

குரு பகவான் சுலோகம்
வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள்
அடைக்கலம் போற்றி போற்றி


புதுப்பிக்கப்பட்ட கோவில்


இதுவே கோவிலின் இன்றைய (2012) தோற்றம். சில ஆண்டுகளாக கோவிலின் மேற்கூரை நாள்பட்ட காரணத்தினால் மழை காலங்களில் ஒழுக்கல் தொடங்கியது.  நான்கைந்து ஆண்டுகளாக கோவில் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சில தடைகளால் திருப்பணி தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஒரே மனதாக 2012 ஜூன் மாதம் பணியைத் தொடங்க தெய்வ உத்தரவு கிடைத்தது. சுமார் ஐந்து மாதங்களில் பணி முடிக்கப்பட்டது.

முன்நாளில் கோவிலின் அமைப்பு அநேகமாக இதே போன்றுதான் இருந்தது. வடக்கு பார்த்த அமைப்பை மாற்றவில்லை. பொதுவாக விஷ்னு ஆலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பதுய் ஐதீகம். ஆனாலும்  நூறு ஆண்டுகளாக தெற்கு நோக்கி இருந்த அமைப்பை மாற்ற யாருக்கும் ஒப்புதல் இல்லை. 

முன்பு வடபுறம் கோபுரம், அதற்கும் தெற்கில் 25 க்கு 16 அடி என்ற அளவில் மண்டபம். மண்டபத்தின் வடபாதி லாகடமாகவும் தென்பாதி ஓட்டுக் கூரையாகவும் இருந்தது. திருப்பணியில் மண்டபம் முழுவதும் கான்கிரீட் தூண்கள் மற்றும் சென்ட்ரிங் அமைப்பு. கோபுரத்தைச் சுற்றி வலம் வரும் வகையில் சுற்றுப் பிரகாரம் அமைக்கப் பட்டுள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் பரிகார தெய்வங்களாக ஆஞ்சநேயர், விஷ்னு துர்க்கை, தன லட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியவை பிரத்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் மண்டபத்தின் முகப்பில் மேற்கில் கிழக்கு பார்த்து விநாயகர் உள்ளார். விஷ்னு ஆலயத்தில் விநாயகர் எழுந்தருளி இருப்பது சிறப்புக்குரியது.  

மண்டபத்தின் மேல் முகப்பில் மையமாக கோபாலகிருஷ்ணர் சிலை திருவாச்சியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகளில் ஆஞ்சநேயர் சிலைகள் சிம்ம வாகனங்களுடன் காணலாம். பின்புறம் மூலைக்கு ஒன்றாக சிம்ம வாகனங்கள் உள்ளன. 

கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் கருடாழ்வார் வணங்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த கோவிலில் மூலஸ்தான க்ண்ணபிரான் தவிர கோபுரத்தின் மேல் சிலைகள் இல்லை. தற்போது தெய்வீகச் சிலைகளுடன் கோவில் அம்சமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்


கோவில் கோபுரமான வரலாறு



 *1913-ம் ஆண்டு தமிழ் ப்ரமாதீச வருடம் திரு. க. தி. நா. ராமசாமி ரெட்டியார் மற்றும் பாரி வெள்ளச்சியம்மாள் & நார்ணம்மாள் அவர்களால் சொந்த பட்டா இடத்தில் மண் சுவர் கூரையுடன் கூடிய சாவடி அமைத்து கிருஷ்ணர் வழிபாடு தொடங்கப்பட்டது.

**1973-ம் ஆண்டு மேற்படியார் குமார்களான திரு. இரா. வரதராஜன் - நாராயணசாமி - கிருஷ்ணராஜ் ஆகியோரால் லாகடம் மற்றும் ஓட்டுக் கூரையுடன் கூடிய மண்டபமும் மூலஸ்தான கோபுரமும் கட்டப்பட்டது.

***2012-ம் ஆண்டு  Dr. இரா. வரதராஜன் - ஜெயப்பாப்பு [குமாரர்கள் Dr. ஈஸ்வரரமணன் - Dr. வித்யா & முரளி - சிவலட்சுமி] மற்றும் இரா. நாராயணசாமி - ராஜேஸ்வரி ஆகியோரால் பொது மக்கள் வழங்கிய நன்கொடைகளும் பெற்று மூலஸ்தான கோபுரம், பிரகார சுற்றுச் சுவர் மற்றும் பரிகார தெய்வங்களுடன் நவீன முறையில் பூரண திருப்பணி செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ. 9,00,000/= ( ரூபாய் ஒன்பது லட்சம்).

*இடம் உபயம்*
:கோவிலுக்கு முன்புறம் உள்ள இடம்:
திரு.தி. ரெங்கசாமிரெட்டியார் - பாலம்மாள்
ஆவல்சூரன்பட்டி (இருப்பு பெத்தானியாபுரம், மதுரை)