Wednesday, July 17, 2013

கோவிலில் உள்ள பரிகார தெய்வங்கள்


தற்போது திருப்பணி செய்த வகையில் கோவிலின் பின் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், விஷ்னு துர்க்கை, தனலட்சுமி, தட்சிணாமூர்த்தி என பரிகார தெய்வங்கள் என நான்கு அருள் மிகு தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்த நேரமும் இந்த தெய்வங்களை வணங்கி பிரார்த்தைனை செய்து கொள்ளலாம். இவை இந்த கோவிலுக்கு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
                                                                       (1)
 < அருள்மிகு ஆஞ்சநேயர் >

                                               * ஆஞ்சநேயரின் சிறப்பு *                               
மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது நேரில் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால் எண்ணிச் செல்லும் காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம். நம்பிக்கைதான் முக்கியம். நம்பினார் பலன் பெறுவர்.

ஆஞ்சநேயருக்கு உகந்தது துளசிமாலை. மேலும் சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி ஆகியவை மிகவும் ஏற்புடையவை. நேர்த்திக் கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம்.
      (2)
  < அருள்மிகு விஷ்னு துர்க்கை >

                                          *விஷ்னு துர்க்கையின் சிறப்பு *
துர்க்கை தாய் சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களில் காட்சிதருவது உண்டு. விஷ்னு ஆலயங்களில் விஷ்னு துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

* வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் அன்னை.
* துர்க்கை தீமைகளை அழித்து, வெற்றியை அருள்பவள்.
* பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரர் ஆனார்.
* போரில் வெற்றி பெற ஸ்ரீராமர் துர்க்கையை வழிபட்டார்.
* மகாபாரதத்தில் தர்மர் துர்க்கையை வணங்கினார்.
* துர்க்கையை வணங்க மரண பயம் விலகும்.
* எதிரிகளை வெல்லலாம் அருள் புரிவாள்.

ராகு கால நேரங்களும், செவ்வாய், ஞாயிறு, வெள்ளி கிழமைகளும், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி திதிகளும் துர்க்கா பூஜைக்கு மிக உகந்தவை. வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் துர்க்கைகளை வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும்.
                                                                        (3)
                                                <அருள்மிகு தனலட்சுமி>

                                                *தனலட்சுமியின் சிறப்பு*
                                              தனலட்சுமி செல்வத்திற்கு அதிபதி.
                                                                     (4)
                                               <அருள்மிகு குரு பகவான்> 

                                               *குரு பகவானின் சிறப்பு*
தட்சிணா மூர்த்தியின் மறு பெயர் குரு பகவான். இவர் தொழில் மற்றும் கல்வி ஞாணத்திற்கு அதிபதி. குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர். குரு பகவான் என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இவர் பார்வை பட்டால் பாவங்கள் சாம்பலாகும்.   குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.

குரு பகவான் சுலோகம்
வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவன் ஆகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே நின்தாள்
அடைக்கலம் போற்றி போற்றி


No comments:

Post a Comment