Wednesday, July 17, 2013

புதுப்பிக்கப்பட்ட கோவில்


இதுவே கோவிலின் இன்றைய (2012) தோற்றம். சில ஆண்டுகளாக கோவிலின் மேற்கூரை நாள்பட்ட காரணத்தினால் மழை காலங்களில் ஒழுக்கல் தொடங்கியது.  நான்கைந்து ஆண்டுகளாக கோவில் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சில தடைகளால் திருப்பணி தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஒரே மனதாக 2012 ஜூன் மாதம் பணியைத் தொடங்க தெய்வ உத்தரவு கிடைத்தது. சுமார் ஐந்து மாதங்களில் பணி முடிக்கப்பட்டது.

முன்நாளில் கோவிலின் அமைப்பு அநேகமாக இதே போன்றுதான் இருந்தது. வடக்கு பார்த்த அமைப்பை மாற்றவில்லை. பொதுவாக விஷ்னு ஆலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பதுய் ஐதீகம். ஆனாலும்  நூறு ஆண்டுகளாக தெற்கு நோக்கி இருந்த அமைப்பை மாற்ற யாருக்கும் ஒப்புதல் இல்லை. 

முன்பு வடபுறம் கோபுரம், அதற்கும் தெற்கில் 25 க்கு 16 அடி என்ற அளவில் மண்டபம். மண்டபத்தின் வடபாதி லாகடமாகவும் தென்பாதி ஓட்டுக் கூரையாகவும் இருந்தது. திருப்பணியில் மண்டபம் முழுவதும் கான்கிரீட் தூண்கள் மற்றும் சென்ட்ரிங் அமைப்பு. கோபுரத்தைச் சுற்றி வலம் வரும் வகையில் சுற்றுப் பிரகாரம் அமைக்கப் பட்டுள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் பரிகார தெய்வங்களாக ஆஞ்சநேயர், விஷ்னு துர்க்கை, தன லட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியவை பிரத்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் மண்டபத்தின் முகப்பில் மேற்கில் கிழக்கு பார்த்து விநாயகர் உள்ளார். விஷ்னு ஆலயத்தில் விநாயகர் எழுந்தருளி இருப்பது சிறப்புக்குரியது.  

மண்டபத்தின் மேல் முகப்பில் மையமாக கோபாலகிருஷ்ணர் சிலை திருவாச்சியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகளில் ஆஞ்சநேயர் சிலைகள் சிம்ம வாகனங்களுடன் காணலாம். பின்புறம் மூலைக்கு ஒன்றாக சிம்ம வாகனங்கள் உள்ளன. 

கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் கருடாழ்வார் வணங்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த கோவிலில் மூலஸ்தான க்ண்ணபிரான் தவிர கோபுரத்தின் மேல் சிலைகள் இல்லை. தற்போது தெய்வீகச் சிலைகளுடன் கோவில் அம்சமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்


No comments:

Post a Comment