Tuesday, January 1, 2013

புரட்டாசி திருவிழா


(1)
< சுவாமி அலங்காரம் >
சுவாமி அலங்காரம் முடிந்து ஊர்வலம் புறப்பட தயார் ஆகுதல். இந்த சப்பரம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சப்பரத்திற்கு புஷ்ப அலங்காரத்திற்கென ஒவ்வொரு திவிழாவிற்கும் யாரவது ஒருவர் நேர்த்திக் கடனாக கூடை நிறைய பூச்சரம் மற்றும் மாலைகள் உபயமாக வழங்கி பகவானின் சிறப்பான அருளைப் பெற்று எண்ணிய காரியம் நிறைவேறக் கண்டவர்கள் ஏராளம். எனவே சப்பர அலங்காரத்திற்கு நான் நீ என முந்திக் கொள்பர்களும் உண்டு. உபயதாரர்கள் பெயர் யாரென அனைவருக்கும் தெரிவிப்பதோடு அன்னாருக்கு கோயில் சார்பாக சுவாமிக்கு சாத்தப்பட்ட பட்டு துண்டு பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்படுகிறார்கள். 
 
(2)
<பெண்கள் கும்மி, ஆண்கள் ஒயிலாட்டம், கோலாட்டம்>

சுவாமி ஊர்வலத்திற்கு தயாராகும் வகையில் ஒருபுறம் சப்பரம் மற்றும் சுவாமி அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அப்போது பள்ளிக் குழந்தைகள் மற்றும்  பல பெண்கள் வயது பாராமல் முளைப்பாரியுடன் வந்து கோவில் முன்பு பாட்டு பாடி கும்மி அடித்து விழாவை சிறப்பிக்கிறார்கள். ஆண்கள் ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் சிறப்பு அம்சங்களாகும்



                                                                




                                                               (3) 
                                               <சுவாமி புறப்பாடு >
சுவாமி அலங்காரம் முடிந்து சுமார் இரவு 11 மணிக்கு சுவாமி புறப்பாடு வெடிகள் முழங்க மேள தாளத்துடன் விமரிசையாக தொடங்குகிறது.
முதலாவதாக கோவிலின் நிர்வாகி மற்றும் ட்ரஸ்டியின் வீட்டின் முன்பு தீப ஆராதனை காட்டப்பட்டு குடும்ப சம்மந்திகளுக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது.அதன்பின் வீடுகள் தவராமல் அர்ச்சனை செய்கிறார்கள்.
 
(4)
<பக்தர்களின் பஜனை>
சுவாமி ஊர்வலம் புறப்பட்டதும் சப்பரத்தைப் பின் தொடர்ந்து பட்டுக் குடை பிடித்து கிருஷ்ண பக்தர்கள் உற்சாகமாக தாளம் வாசித்து ஆடிப்பாடி வருவது வழக்கம்.




(5)
திருக்கண் (1) (கிழக்குத்தெரு)
கிழக்குத்தெரு இளைஞர்கள் சுவாமிக்கு எதிர்சேவை செய்து திருக்கண் அமைத்து பொங்கல் வைத்து மகிழ்கிறார்கள். இங்கும் பெண்களின் கும்மி, ஒயிலாட்டம் மற்றும் ஆண்களின் ஒயிலாட்டம், கோலாட்டம்  நடைபெறுகிறது.







(6)
திருக்கண் (தெற்குத் தெரு)
முதல் திருகண்ணிலிருந்து சுவாமி புறப்பட்டு ஊரின் மேற்கில் எழுந்தருளியுள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்பி வரும் வழியில் தெற்குத்தெருவில் எழுந்தருளியுள்ள மந்தையம்மன் மற்றும் காளியம்மன் தெய்வங்களுக்கு மாலை சாத்தி அர்ச்சனை செய்து திருகண்ணில் அமர்கிறார். இங்கு ஊரின் தென்பகுதி பக்தர்கள் அர்ச்சனை முடிய அதிகாலை 4 மணிக்கும் மேலாகும். அதன்பின் இறுதிக் கட்டமாக உறியடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.




(7)
                                                        கோவிலுக்கு திரும்புதல்
இறுதியாக சுவாமி கோவிலுக்கு திரும்புதலுடன் ஊர்வலம் முடிவடையும்.. சுவாமி மீண்டும் தன் இருப்பிடம் வந்து சேரும்போது சரியாக விடிந்துவிடும். பெண்கள் வீடு தவறாமல் கோலமிட்டு பகவானை வரவேற்கிறார்கள்.