Sunday, January 4, 2015

விநாயகர் பிரதிஷ்டை


கிருஷ்ணர் வழிபாடு கோயில்கள் விஷ்ணுக்குரியது எனினும் விஷ்ணு ஆலயங்களில் விநாயகர் இருப்பதில் தவறில்லை. அதாவது விஷ்ணு ஆலையங்களில் சிவன் இருப்பதும் சிவாலயங்களில் விஷ்ணு இருப்பதும் நல்ல விஷயம்தான். மனிதர்களாகிய நாம்தான் கடவுள்களில் பிரிவினையை உண்டாக்குகிறோமே தவிர தெய்வங்கள் எல்லாம் சிவம் வைஷ்ணவம் என வேறுபட்ட பார்வையில் நமக்கு நன்மை செய்யவே உள்ளன. அந்த வகையில் ஆவல்சூரன்பட்டி கிருஷ்ணன் கோவிலில் விநாயகர் வழிபாடு உண்டு என்பது சிறப்பு அம்சம்.

இவ்வூரில் ராசாத்தி அம்மாள் கடவுள் பக்தியும் பரந்த எண்ணமும் கொண்டவர். அந்த வகையில் இவ்வூரிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் மூலப் பொருளாகிய விநாகர் அவசியம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவராகவே முன்வந்து கிருஷ்ணன் கோவிலின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி ஒரு சிறிய பீடத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய காரணமாக இருந்தார்.

2013-ல் கோவில் திருப்பணியின்போது விநாயகர் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டார். அன்று முதல் கோவிலுக்கு வருபவர்கள் முதலில் விநாயகரையும் பின்னர் கிருஷ்ணனையும் வணங்கி வருகிறார்கள் என்பது சிறப்புக்குரியது. மார்கழி மாதம் தினந்தோறும் விடியும் வேளையில் விநாயகருக்கு நன்ணீராட்டி பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை கோவிலுக்கு வந்து விநாயகரையும் கிருஷ்ணனையும் ஒரே இடத்தில் வழிபட்டு நலம்பெற வேண்டுகிறோம்.    

No comments:

Post a Comment