Monday, July 15, 2013

கிருஷ்ணன் கோவிலில் விநாயகர்..!


கிருஷ்ணன் கோவிலில் விநாயகரா? பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் தரிசனத்திற்கு முன் விநாயகர் வழிபாடு என்பது சாஸ்திரம். ஆனாலும் விஷ்ணு கோவிலில் விநாயகர் இருப்பதில் தவறில்லை என்பது மற்றொரு சாஸ்திரம். முருகன் யார்? மால் மருகன். அதாவது திருமாலின் மகளான வள்ளியை மணந்தவன் முருகன் என்று யாவரும் அறிந்ததே. அந்த வகையில் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகிய கிருஷ்ணன் குடியிருக்கும் வீட்டில் (கோவில்) மருமகன் முருகனின் உடன் பிறந்த அண்ணன் விநாயகப் பெருமான் அமர்ந்திருப்பதில் தவறில்லையே. 

தொடக்கத்தில் மூலவர் மற்றும் உற்சவர் என்ற வகையில் இக்கோயிலில் கிருஷ்ணர் மட்டுமே ஆதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனாலும் 2013-ல் கோயில் திருப்பணி முடியும் தருவாயில் சிலர் மூலப்பொருள் இல்லாத கோயிலா என்ற விணாவை எழுப்பினர். அவ்விணா பரிசீலிக்கப்பட்டது. கிருஷ்ணர் கோவிலாக இருந்தாலும் கிருஷ்ணனை வழிபட வருவோரை வரவேற்கும் வகையில் முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து காரிய சித்திக்கு வழிவிடும் விநாயகர் எழுந்தருளி இருப்பது இக்கோயிலின் சிறப்பு.        

No comments:

Post a Comment